மாஸ்கோ: இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தை நடுவர் முடித்து வைத்ததும் இங்கிலாந்து ஆட்டக்காரர்களும் ரசிகர்களும் சொல்ல முடியாத வேதனையில் துடித்தனர். 1990ஆம் ஆண்டில் இத்தாலி யில் இங்கிலாந்துக்கு ஏற்பட்ட சோதனை இவ்வாண்டின் போட்டியிலும் நிகழ்ந்துவிட்டது. 1990ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அரையிறுதி வரை சென்ற இங்கிலாந்து ஜெர்மனி யிடம் பெனால்டி ஷூட்அவுட்டில் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து 1966ஆம் ஆண்டில் அதன் ஒரே ஓர் உலகக் கிண்ணத்தை வென்றது. அதற்குப் பிறகு நடத்தப்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த ஆண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் எப்படியாவது வாகை சூடி கிண்ணம் ஏந்த வேண்டும் என இங்கிலாந்து கொண்டிருந்த கனவும் நேற்று அதிகாலை கலைந்தது.
கூடுதல் நேரத்துக்குப் பிறகு 2=1 எனும் கோல் கணக்கில் குரோவேஷியாவிடம் இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது. ஆனால் ஆட்டத்தின் துவக் கத்தில் இங்கிலாந்துதான் ஆதிக்கம் செலுத்தியது. நிர்வாகி கேரத் சௌத்கேட் வகுத்த வியூகத்துக்கு ஏற்ப மிகுந்த முனைப்புடன் விளை யாடிய இங்கிலாந்து குழுவின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் குரோவே ஷிய வீரர்கள் திண்டாடினர். ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத் தில் இங்கிலாந்துக்கு ஃப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. ஃப்ரீகிக் வாய்ப்பை எடுத்த கீரன் ட்ரிப்பியே அனுப்பிய பந்து தற்காப்புச் சுவரைக் கடந்து, அழகாக வளைந்துச் சென்று வலைக்குள் புகுந்தது.
கூடுதல் நேரத்தில் குரோவேஷியாவின் வெற்றி கோலைப் போடும் மன்சுகிச்.