லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேறு வது (பிரெக்ஸிட்) தொடர்பில் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே வகுத்த திட்டம் தொடருமேயானால் அமெரிக்காவுடன் பிரிட்டன் பெரும்பாலும் வர்த்தக உடன்பாடு செய்து கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். பிரிட்டிஷ் பிரதமரின் திட்டத்தால் அந்த வர்த்தக உடன்பாடு தோல்வி அடையும் என்று திரு டிரம்ப் கூறினார்.
இதனால் பிரிட்டனுடன் அமெரிக்கா வர்த்தக உடன்பாடு செய்துகொள்வதற்குப் பதிலாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் வர்த்தக உடன்பாடு செய்துகொள்ள நேரிடும் என்றும் திரு டிரம்ப் குறிப்பிட்டார். திரு டிரம்ப் பிரசல்ஸ் சென்றி ருந்தபோது 'தி சன்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். பிரிட்டன் வெளியேற்றம் தொடர்பில் தான் கூறிய யோசனை களை திருவாட்டி மே புறக்கணித் திருப்பதாகவும் டிரம்ப் கூறினார். சென்ற வாரம் பதவி விலகிய பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சனை பாராட்டிய டிரம்ப், பிரதமர் ஆவதற்கு அவர் தகுதியானவர் என்று கூறினார்.