பேங்காக்: தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங் குகையை சுற்றிப் பார்க்க சென்றபோது காற்பந்துக் குழுவினர் உணவு எதுவும் எடுத்துச் செல்லவில்லை என்று அந்த குகையிலிருந்து காப் பாற்றப்பட்ட சிறுவர்களில் ஆக இளவயது சிறுவன் அவன் தாயிடம் கூறியுள்ளான். ஒரு மணி நேரத்திற்குள் அந்த குகையை சுற்றிப்பார்க்க காற்பந்துக்குழுவினர் எண்ணி யிருந்ததால் சாப்பிடுவதற்கு சிற்றுண்டி உணவுப் பொருட் களை அவர்கள் எடுத்துச் செல்லவில்லை என்று தன் மகன் தன்னிடம் கூறியதாக இகான் என்ற மாது கூறியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 11 வயது மகனை கண்ணாடி வழியாகப் பார்த்த போது அவன் இவ்வாறு கூறியதாக அந்த மாது கூறினார். காற்பந்துக் குழுவினர் குகைக்கு செல்லும்போது உணவு எதுவும் கொண்டு செல்லவில்லை என்று அந்தச் சிறுவன் கூறியிருப்பது முன்ன தாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கு முரணாக உள்ளது. ஒரு சிறுவனின் பிறந்த நாளைக் கொண்டாட காற்பந்துக் குழுவினர் அந்த குகைக்குள் சென்றதாகவும் அவர்கள் எடுத்துச் சென்ற உணவு தீர்ந்து விட்டதாகவும் முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளி யிட்டிருந்தன. இதற்கிடையே, குகையி லிருந்து காப்பாற்றப்பட்ட 12 சிறுவர்களில் இரு சிறுவர்களும் அவர்களின் பயிற்றுவிப்பாளரும் தாய்லாந்து குடியுரிமை பெறு வதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.