ஆர்ச்சர்ட் நிலைய சுரங்கப் பாதை நிபுணத்துவ சாதனை

தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் வழித்தடத்தில் அமையும் புதிய ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதை பெரும் பொறியியல் நிபுணத்துவ சாதனையாகத் திகழ் கிறது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவிக்கிறது. அந்த நிலையம் 2021ல் கட்டி முடிக்கப்படும். அப்போது பயணி கள் வடக்கு=தெற்கு வழித்தடத் திற்கும் தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் வழித்தட ரயில் நிலைய தள மேடைகளுக்கும் தங்குதடை இல் லாமல் சரளமாகச் செல்லமுடியும். ஆர்ச்சர்ட் பொலிவார்ட்டுக்கு கீழே கட்டப்படும் சுரங்கப்பாதை இதற்கு வழி செய்கிறது.

ஆர்ச்சர்ட் பொலிவார்ட் நெடுகிலும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல், இப்போதைய ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கும் எந்தத் தடங்க லும் இல்லாமல் அந்தச் சுரங்கப் பாதை எப்படி கட்டப்படுகிறது என்பதை நிலப்போக்குவரத்து ஆணையம் விளக்கி இருக்கிறது. சிங்கப்பூரில் எம்ஆர்டி கட் டமைப்பு ஒன்றில் முதல் தடவை யாக புதிய ஒரு முறை அந்தச் சுரங்கப்பாதையில் கையாளப்படு கிறது. 'குழாய்க் கூரை' என்று அந்த முறைக்குப் பெயர். அந்தச் சுரங்கப்பாதை முற்றி லும் 1.2 மீ. விட்டமுள்ள இரும்புக் குழாய்கள் ஒன்றுக்கொன்று பின் னிப்பிணைந்த முறையில் அமைக் கப்படுகின்றன.

போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, நேற்று தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடத்தில் கட்டப்படும் ஆர்ச்சர்ட் எம்ஆர்டி நிலைய கட்டுமான இடத்திற்கு வருகை அளித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!