ஸ்பூனர் ரோட்டில் இருக்கும் புளோக் ஒன்றின் முதல்மாடி ஓரறை வீட்டில் தம்பதி இருவர், இரண்டு ஆடவர்களை மூங்கில் கழிகள் உட்பட பலவற்றையும் கொண்டு தாக்கும் காணொளி இணையத்தில் பரபரப்பாகி இருக் கிறது. எட்டு நிமிடம் ஓடும் அந்தக் காணொளி ஜூலை 10ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது. அந்தக் காணொளியில் தென் பட்ட மாது, வேலையில்லாதவர் என்றும் அவருக்கு 35 வயது இருக்கும் என்பதும் அந்தக் காணொளி சென்ற சனிக்கிழமை இரவு எடுக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.
இதனிடையே, தன் பெயரைக் குறிப்பிடாத அந்த மாதின் புதல்வி, அந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு சுமார் 20 பேர் வந்து வீட்டு சன்னலை உடைத்துவிட்டதாகக் கூறினார். ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த அந்தச் சன்னல் உடைப்பு சம்பவம் பற்றி தங்களிடம் தெரி யப்படுத்தப்பட்டதாகவும் அந்தச் சம்பவத்தைக் குறும்புத்தனம் என்று தாங்கள் வகைப்படுத்தி இருப்பதாகவும் போலிஸ் பேச் சாளர் ஒருவர் தெரிவித்தார். புலன்விசாரணை தொடர்வதாக வும் போலிஸ் தெரிவித்தது.