பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் தன்னுடைய காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கவலையடைந்தார். அவர் தன் முதலாளியின் ஒரு வயது குழந்தையைக் கொடுமைப் படுத்தி அதை தனது கைத்தொலை பேசியில் படமாக எடுத்து அந்தப் படங்களை தன்னுடைய காதல னுக்கு அனுப்பினார். தனக்குக் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பதைக் காத லனுக்குக் காட்டுவதற்காக அந்தக் காணொளிப் படங்களை எடுத்து அந்த மாது அனுப்பியதாக விசார ணையில் தெரிவிக்கப்பட்டது. லெஸ்லி ஆன் பெல்மோன்ட் டெய்சா என்ற அந்தப் பெண்மணி இந்த ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி கைக்குழந்தையை ஒரு தலை யணையில் வைத்து அழுத்தினார்.
குழந்தையின் முடியைப் பிடித்து இழுத்தார். சமையலறை கத்தியின் கூர்மையில்லாத அகலமான பகுதியால் அந்தக் குழந்தையின் பின்புறத்தில் அடித்தார். இதை எல்லாம் அந்தக் காணொளிப் படங்கள் காட்டின. குழந்தையைக் கொடுமைப்படுத் தியது தொடர்பான இரு குற் றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த 36 வயதுப் பெண்மணிக்கு ஒன்பது மாதம் சிறைத்தண்டனை கிடைத்தது.