சென்னை: காங்கிரஸ் தலைவர் களில் ஒருவரான ப.சிதம்பரத் துக்கும் திமுகவுக்கும் இடையில் நல்லுறவு இல்லை. 2014 நாடாளு மன்றத் தேர்தலில் திமுக கூட் டணியில் 20 இடங்களைக் கேட் டார் சிதம்பரம். அதன் காரண மாக கூட்டணியே அமைய வில்லை. இனி வரக்கூடிய தேர் தல்களில் திமுக கூட்டணியையே சோனியாவும் ராகுலும் விரும்பு கின்றனர். ஆனாலும் அதற்கு திமுக தரப்பிலிருந்து எந்த தக வலும் இல்லை.
'ஒருவேளை காங்கிரஸ் கூட் டணியை திமுக நிராகரித்துவிட் டாலோ எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காவிட்டாலோ அதிமு கவைப் பயன்படுத்த வேண்டும்' என காங்கிரஸ் மேலிடத்தில் கூறியிருக்கிறார் ப.சிதம்பரம். நாடாளுமன்றத் தேர்தலுக் கான பிரம்மாண்ட கூட்ட ணியை அமைக்கும் முயற்சி யில் தீவிரமாக ஈடுபட்டு வரு கிறார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா. 'ரஜினியோடு கூட்டணி என அறிவித்துவிட்டால் இன்னும் பல்லாயிரம் பேர் பாஜகவுக்குள் இணைவார்கள்' எனக் கணக்கு போட்டு வருகிறார் அவர். அதே நேரம், சசிகலா குடும்பத்துக்கு எதிராக சோதனை நடவடிக்கை களைத் தொடங்கியதுபோல அதிமுக அமைச்சர்களுக்கு எதி ராகவும் அமித் ஷா நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டார்.