கட்டுக்கட்டாகப் பணம்; அப்படியே ஒப்படைத்த பள்ளிச் சிறுவன்

ஈரோடு: ஈரோட்டைச் சேர்ந்த ஏழு வயது மாணவர் முகம்மது யாசின், ஈரோட்டில் இருக்கும் சின்னமேசூர் பஞ்சாயத்து பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பள்ளிக்கு இடைவேளை விடப்பட்டது. அப்போது பள்ளிக்கு வெளியே சென்ற யாசின், கீழே கிடந்த ஒரு பையை எடுத்துப் பார்த்துள்ளார். பையின் உள்ளே கட்டுக்கட்டாகப் பணம் இருந்துள்ளது. அதை அப் படியே எடுத்துச் சென்று தனது ஆசிரியையிடம் தந்துள்ளார் அந்த மாணவர். பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் அந்தப் பை போலிசில் ஒப்படைக்கப்பட்டது. யாசினின் நேர்மையைப் பாராட்டி வரும் 19 ஆம் தேதி மாவட்ட அளவிலான போலிஸ் சந்திப்பின்போது அவருக்குச் சான்றிதழ் வழங்கப் படும் என்று மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!