செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்த வருத்தம் இருந்தாலும் மூன்றாவது இடத்தையாவது பிடித்து ஆறுதல் காணும் முனைப்புடன் இன்றிரவு பத்து மணிக்குத் தொடங்கும் ஆட்டத்தில் இங்கிலாந்தும் பெல் ஜியமும் மோதவுள்ளன. கிண்ணமே கைவிட்டுப்போன நிலையில் மூன்றாவது இடத்திற் காக விளையாட எந்த அணியும் விரும்பாது. இருந்தாலும், வெற்றி யுடன் விடைபெற இந்த ஆட்டம் வாய்ப்பளிக்கிறது.
கூடுதல் நேரம் வரை சென்ற அரையிறுதியில் குரோவேஷியா விடம் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து தோற்றது. மறுபுறம், இன்னோர் அரையிறுதியில் 1=0 எனத் தோற்று, இறுதி ஆட்டத்திற் குள் நுழையும் வாய்ப்பை இழந்தது பெல்ஜியம். இதில் வியப்பு என்னவெனில், இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைப் பறிகொடுத்த இவ்விரண்டுமே 'ஜி' பிரிவில் இடம்பெற்றிருந்த அணிகள். இவ்விரு அணிகளும் மோதிய முதல் சுற்று ஆட்டத்தில் 1-0 என பெல்ஜியம் வென்றிருந்தது. ஆயினும், இரு அணிகளும் ஏற்கெனவே இரண்டாம் சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டதால் முன்னணி வீரர்கள் சிலர் களமிறங்கவில்லை.
'ஜி' பிரிவில் இடம்பெற்றிருந்த இவ்விரு அணிகளும் மோதிய முதல் சுற்று ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. படம்: ஏஎஃப்பி