பாகிஸ்தானில் 133 பேர் பலி பாகிஸ்தானில் பயங்கரவாதம்

அரங்கேற்றப்பட்ட பலுசிஸ்தான் மாநிலத்தில் இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. பலுசிஸ்தான் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் மனித வெடிகுண்டு வெடித்து 128 பேர் கொல்லப்பட்ட சம்பவம், 2014க்குப் பிறகு அந்த நாட்டில் நிகழ்ந்துள்ள படுமோசமான பயங்கரவாதச் சம்பவம் என்று தெரிவிக்கப்பட்டது. மாஸ்துங் என்ற நகரில் பலுசிஸ்- தான் அவாமி லீக் கட்சி பிரசாரக் கூட்டம் நடந்தபோது மனித வெடி குண்டு வெடித்துச் சிதறியது. அந்தத் தாக்குதலில் அந்தக் கட்சியின் தலைவர் சிராஜ் ரைசானி என்பவர் கொல்லப்பட்டார்.

இதர சுமார் 150 பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள். பாதிக் கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ள மருத்துவமனைகளில் அவ சரகால நிலை பிரகடனப்படுத்தப் பட்டு இருக்கிறது. அந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப் பேற்றுக் கொண்டுள்ளது. அந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு முன்னதாக பான்னு என்ற வடக்கு நகரில் அதேப்போன்ற தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் ஒரு குண்டு வெடித்தது. அதில் ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள். 37 பேர் காயம் அடைந்தார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!