அறிவிக்கப்படாத அவசர நிலை: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கடலூர்: பசுமை வழிச் சாலை பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர் களைச் சந்திக்கச் சென்ற கம்யூ னிஸ்ட் கட்சியினரை கைது செய்திருப்பது அரசின் ஏதேச்சதி காரத்தைக் காட்டுவதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் தெரிவித்துள்ளார். கூடலூரில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், விவசாயிகளை மிரட்டி, ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்துப் போடப்படும் பசுமை வழிச்சாலை யாருக்காக என்பது மர்மமாக உள்ளது என்றார்.

அரசின் இந்த நடவடிக்கை யைக் கண்டித்து விவசாயிகளைத் திரட்டி, ஆகஸ்ட் 1ஆம் தேதி, திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை நடைப்பயணம் மேற்கொள்வது என முடிவு செய் யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சத்துணவு முட்டை விநியோகத்தில் ரூ. 5,000 கோடி ஊழல் நடந்திருப்பது குறித்து சிபிஐ விசாரனை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். "காவல் துறை மூலமாகத் தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை அரசு அமல் படுத்தியுள்ளது. பாதிக்கப்படும் மக்களுக்காகப் போராடுபவர்கள், போராடும் அமைப்புகள் மீது வழக்குத் தொடுத்து, அடக்கு முறையை அரசு கையாள்கிறது," என்று பாலகிருஷ்ணன் சாடினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!