மெக்சிகோ சிட்டி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவும் வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரிகள் சிலரும் மெக்சிகோவுக்கு நேற்று முன்தினம் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டனர். அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் கிரிஸ்ட்ஜன் நியேல்சன், நிதி அமைச்சர் ஸ்டீவன் நுசின், அதிபருக்கான ஆலோசகரும் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மருமகனுமான ஜரட் குஷ்னரும் திரு பாம்பியோவுடன் சென்றிருந்தனர்.
அண்மையில் நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்று மெக்சி கோவின் அதிபராக தேர்ந்தெடுக் கப்பட்ட திரு ஆண்ட்ரேஸ் மானுவல் லோபேஸ் ஒப்ராடோரைச் சந்தித்துப் பேசினார் திரு பாம்பியோ. மெக்சிகோவுடனான உறவுக்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவம் கொடுப்பதை நிரூபிக்கவே அமெரிக்க மூத்த தலைவர்கள் மெக்சிகோவுக்குப் பயணம் மேற்கொண்டதாக இடதுசாரியான திரு ஒப்ராடோரிடம் திரு பாம்பியோ கூறினார்.
(இடமிருந்து) திரு மைக் பாம்பியோ, திரு ஸ்டீவன் நுசின், திரு ஆண்ட்ரேஸ் மானுவல் லோபேஸ் ஒப்ராடோர். படம்: ஏஎஃப்பி