பெய்ஜிங்: சீனாவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக அந்நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. சீனாவின் பிரதான நதிகளோரம் வெள்ளம் கரை புரண்டோடுவதால் பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் சாலைகளில் வாகனங் களும் தண்டவாளங்களில் ரயில் களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயிரக் கணக்கானோர் தங்கள் இருப் பிடத்திலிருந்து வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களில் சீனாவின் 24 மாகாணங்களில் உள்ள 241 நதிகளில் வெள்ளம் கரை புரண்டோடியதாகவும் அதன் விளைவாக $5.29 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டது.
சீனாவில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று அந்நாட்டின் வானிலை மையம் முன்னுரைத் துள்ளது. இதனால் வெள்ளநிலை மோசமடையும் என்றும் மேலும் பல நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் நிலவரப்படி சொங்சிங் நகரில் 80,000க்கும் அதிகமா னோர் வெளியேற்றப்பட்டதாக சீன ஊடகம் தெரிவித்தது. சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கான்சு மாகாணத்தில் வெள்ளம் காரண மாக 12 பேர் மாண்டதாகவும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அதிகாரிகள் கூறினர்.
சீனாவின் செங்டு நகரில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த பெண்ணை மீட்கும் தீயணைப்புப் படையினர்.