ப. பாலசுப்பிரமணியம்
வேலையிடத்தில் பணிபுரியும்போது 2013ஆம் ஆண்டில் சிண்டாவின் இளையர் மன்ற தொண்டூழிய வாய்ப்புகளைப் பற்றி திரு ஜெரமி அருள்தாஸ் அறியவந்தார். அன்றிலிருந்து இன்றுவரை, சிண்டாவின் இளையர் மன்ற நட வடிக்கைகளில் முக்கிய தொண்டூ ழியராக இடம்பெற்று துணைப் பிர தமர் தர்மனின் தனிப்பட்ட பாராட் டையும் பெற்றார் 36 வயது அர சாங்க ஊழியரான ஜெரமி. "பல்கலைக்கழக நாட்களிலி ருந்து இளையர்களுடன் ஒன்று சேர்ந்து செயல்படுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.
அதுவே சிண்டாவுடன் தொண்டூழியம் புரிய முக்கிய காரணமாக விளங்கி யது. 'ஸ்பின்' எனும் விளையாட்டு பொழுதுபோக்குக் குழுவை அமைக்க உதவியிருந்தேன். கிட் டத்தட்ட 300 இளையர்கள் பற்பல விளையாட்டுகளில் ஈடுபட இது வழிசெய்கிறது. ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைப் பிடித்து பெற்றோர்களையும் அதில் ஈடுபடுத்தும் நோக்கத் துடன் இதனைத் தொடங்கி னோம்," என்று தனது பங்க ளிப்புகளில் ஒன்றை விளக் கினார், நிகழ்ச்சியில் தொண்டூழிய விருதுபெற்ற ஜெரமி.
வேலை-வாழ்க்கை சம நிலையை அடைவது கடினம் என்றாலும் நேரத்தை நன்கு வகுத்துக் கொண்டால் தொண்டூழியத்திற்கும் சிறிது நேரம் கிடைக்கும் என்பது இவரது கருத்து. ஜெரமியைப் போல கிட்டத்தட்ட 500 தொண்டூழியர்கள் சிண்டாவின் திட்டங்களுக்குப் பக்கபலமாக உள் ளனர்.