You are here

7 நாட்களுக்கு கார் ரேடியேட்டர் நீரைக் குடித்து உயிர்வாழ்ந்த மாது

கலிஃபோர்னியா: போர்ட்லென், ஒரேகன் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது ஏஞ்சலா ஹெர்னாண்டஸ் காணாமல் போனதைத் தொடர்ந்து ஒரு வாரம் கழித்து கலிஃபோர்னிய கடலோரக் குன்றின் அடிப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். அந்த மலைக்குன்றிலிருந்து அவரது கார் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து அந்த மாது ஏழு நாட்களுக்கு கார் ரேடியேட்டர் நீரைக் குடித்து உயிர்வாழ்ந்ததாக நேற்று முன்தினம் அதிகாரிகள் தெரிவித்தனர். எரிவாயு நிலையம் ஒன்றில் கடைசியாக ஜூலை 6ஆம் தேதியன்று தன் வாகனத்துடன் காணப்பட்ட ஏஞ்சலா அதன்பின் காணாமல் போன சம்பவம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சென்ற வெள்ளிக்கிழமை மாலை ஏஞ்சலாவின் சேதமடைந்த வாகனத்தைப் பார்த்த சிலர் தோள் காயத்துடன் ஏஞ்சலாவை உயிருடன் கண்டுபிடித்தனர்.