லண்டன்: விம்பிள்டன் பொது விருதுப் பட்டத்தை எட்டாவது முறையாக வென்று சாதிக்க வேண்டும் என்ற அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்சின் கனவைச் சிதறடித் தார் ஜெர்மனியைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பா. இறுதி ஆட்டத்தில் 6=3, 6=3 என்ற நேர் செட்களில் வென்ற கெர்பா, விம்பிள்டன் பட்டத்தை வென்றிருப்பது இதுவே முதல் முறை. அதோடு, 2016 விம்பிள்டன் இறுதிப் போட்டியில் செரீனாவிடம் கிட்டிய தோல்விக்கும் அவர் பழி தீர்த்துக்கொண்டார். மேலும், 22 ஆண்டுகளுக்குப் பிறகு விம்பிள்டன் பட்டத்தை வென்ற ஜெர்மானிய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்குக் கிட்டியது.
முதன்முறையாக விம்பிள்டன் பட்டத்தைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பா. படம்: ராய்ட்டர்ஸ்