பிடார்: வதந்தியால் கும்பல் தாக் குதலுக்குப் பலியான மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர் நாடகா மாநிலம் பிடார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இச்சம்பவம் நடந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த முகம்மது அஸாம், முகம்மது சலாம், பஷீர், அக்ரம் ஆகிய நால்வரும் பிடார் நகருக்கு சென்றனர். இவர் களில் முகம்மது சலாம் கத்தார் நாட்டில் வசிப்பவர். முகம்மது அஸாம், 32, கூகல் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றியவர். பிடாரில் நிலம் வாங்கத் திட்டமிட்ட அஸாம் இதர மூவருடன் அங்கு சென்றார். அம் மூவரும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.
தேநீர் அருந்துவதற்காக பள்ளிக் கூடம் ஒன்றின் அருகில் அவர்கள் தங்களது காரை நிறுத்தினர். கடை அருகிலிருந்த பள்ளிச் சிறு வர்கள் சிலருக்கு முகம்மது சலாம் சாக்லெட் கொடுத்தார். அந்த நிகழ்வைப் படம் பிடித்த ஒருவர் 'வாட்ஸ்அப் குரூப்' மூலம் அதனை மற்றவர்களுக்கு அனுப் பினார். குழந்தை கடத்தும் கும் பல் சாக்லெட் விநியோகிப்பதாகவும் அவர்களைப் பிடிக்க வேண்டும் என்றும் அந்தக் காணொளியில் கூறப்பட்டு இருந்தது. காணொளியைக் கண்டதும் அருகிலிருந்த முர்கி கிராமத்தினர் நூற்றுக்கணக்கில் ஒன்றுதிரண்டு வந்தனர். ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதாக உணர்ந்த நால்வரும் காரை எடுத்துக்கொண்டு வேகமாக ஓட்டினர். கும்பலலைச் சேர்ந்த சிலர் மோட்டார் சைக் கிளில் காரைத் துரத்தினர். தொடர்ந்து அந்தக் கும்பல் காரை மறிக்கும் விதமாக சாலை யின் குறுக்கே மரத்தை வெட்டிப் போட்டது. அந்தச் சாலைத் தடுப் பிலிருந்து ஒதுங்கி காரைச் செலுத்த முயன்றபோது அருகி லிருந்த சிறிய பாலத்தின் மீது கார் மோதி கவிழ்ந்தது.