பெங்களூரு: கர்நாடகாவில் காங் கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தள மும் (மஜத) கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. முதல்வராக மஜத தலைவர் குமாரசாமி பதவியேற்ற பின் ரூ. 34,000 கோடி மதிப்புள்ள விவ சாயக் கடன்களை தள்ளுபடி செய் தார். இந்நிலையில், பெங்களூரு சேஷாத்ரிபுரத்தில் உள்ள மஜத தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் செயல்வீரர் பிரிவின் சார்பில் முதல்வர் குமாரசாமி, மஜத அமைச்சர்கள் மற்றும் எம்எல் ஏக்களுக்கு நேற்று முன்தினம் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் முதல்வர் குமாரசாமி, அவரது தந்தையும் முன்னாள் பிர தமருமான தேவகவுடா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் குமாரசாமி பேசுகை யில், மங்களூருவில் போராட்டம் நடத்திய சில பெண்கள் தங் களுக்கான முதல்வர் குமாரசாமி அல்ல என கூறி கோஷமிட்டது தனது மனதைப் புண்படுத்திவிட் டதாகக் கூறினார். மக்கள் தம்மை ஆதரிக்கவில்லை எனக் கூறி உணர்ச்சிவசப்பட்ட அவர், கண் கலங்கினார்.
பின்னர் கண்களைத் துடைத்த வாறு பேசிய குமாரசாமி, "நான் என்ன பாவம் செய்தேன். பதவியேற்று இரண்டு மாதங்கள்கூட ஆகவில்லை. ஆட்சி செய்வதற்கு கால அவகாசம் கொடுக்காமல் என்னை நிந்திப்பது ஏன்? விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தும் எனக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை. "நான் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர் பதவி என்பது மலர்ப் படுக்கை அல்ல; முட்படுக்கை. நெருக்கடி ஏற்பட்டால் நான் எந்த நேரத்திலும் பதவி விலகுவேன்," என்று புலம்பினார்.
கட்சியினர் முன் னால் கண்ணீர் வடித்த முதல்வர் குமாரசாமி, பின்னர் ஒருவழியாகக் கண்ணீரைத் துடைத்துவிட்டு தமக்கு உள்ள சிரமங்களை விவரித்தார். படம்: இந்திய ஊடகம்