சந்தேக பேர்வழிகள் மூவர் ஜாவாவில் சுட்டுக்கொலை

ஜகார்த்தா: பயங்கரவாத சந்தேகப் பேர்வழிகள் மூவரை இந்தோனீசிய அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாக போலிசார் கூறினர். அந்த மூன்று சந்தேக நபர்களும் கூர்மையான ஆயுதங் கள் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி போலிஸ் அதிகாரி களைத் தாக்கியதைத் தொடர்ந்து அவர்களை பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாக போலிஸ் படை பேச்சாளர் முகமட் இக்பால் கூறினார். அத்தாக்குதலில் போலிஸ் அதிகாரிகள் இருவர் காயம் அடைந்ததாகவும் சந்தேக நபர்கள் வைத்திருந்த துப்பாக்கிகளை போலிசார் கைப்பற்றியதாகவும் திரு இக்பால் கூறினார். "அந்த மூவரும் போலிசாரை எதிர்த்து நின்றது போலிசாரின் உயிருக்கும் அந்த இடத்தில் இருந்த மக்களின் உயிருக்கும் மிரட்டலாக இருந்ததால் அவர் களை போலிசார் சுட்டுக் கொன் றனர்," என்று இக்பால் கூறினார். மத்திய ஜாவாவில் உள்ள யோக்ஜகார்த்தா நகரின் முக்கிய வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்ததாகவும் அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!