‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’

அண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் 'எலிஸ் ஸ்பிரிங்ஸ்' பகுதியில் நடை பெற்ற 'கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்' அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப் பங்காற்றினார் திரு கணேஷ். 'ஹீலியம்' பலூன் மூலம் ஒரு மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் இந்த முயற்சி 'இன்.ஜீனியஸ்' என்ற நிறுவனத்தால் இவ்வாண்டு மே 15ஆம் தேதி மேற்கொள்ளப் பட்டது.

2015ஆம் ஆண்டில் தன் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப் பின்போது வேலைப் பயிற்சி பெறும் ஓர் அங்கமாக இரண்டு மாதங்களுக்கு பலூன்களை விண்வெளிக்கு அனுப்புவதைப் பற்றி கற்றுக்கொள்ள திரு கணேஷ் அவரது பல்கலைக் கழகத்தின் மூலமாகச் சென்றார். இதைப் பற்றி 'இன்.ஜீனியஸ்' நிறுவனத்தின் இயக்குநர் திரு லிம் செங் அறிய வந்தார். திரு கணேஷைத் தன் நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டு, 'கோ-ஸ் பேஸ் புரோஜெக்ட்' முயற்சியில் இருந்த ஆறு பேர் குழுவில் ஒருவராகவும் தேர்ந்தெடுத்தார்.

"விண்வெளி வீரரின் உயிரைப் பாதுகாக்கும் அம்சங் களின் உருவாக்கமும் இயக்க மும் என் மூலப் பொறுப்புகளாக இருந்தன. பாதுகாப்பிற்கு முக்கி யத்துவம் காட்டி அனைத்து இயந்திரங்களையும் தயாரிப்பது அவசியம். முயற்சி தவறாகப் போவதற்கு பல வழிகள் உள்ளன. அனைத்து விதமான சூழ்நிலைகளுக்கும் சவால் களுக்கும் எப்படி உடனே தீர்வு காண்பது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்," என்று கூறினார் திரு கணேஷ்.

பலூன் பயணம் செய்யும் முறைகளை விரிவாக்கம் செய்ய திரு லிம், 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஹைதராபாத்தில் இருக்கும் தேசிய பலூன் நிலையத்திற்குச் சென்றிருந்தார். பலூன் பயணத்தை மேலும் மலிவாக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் அங்கு ஆராய்ச் சிகள் நடத்தப்பட்டன.

"நம்பிக்கை, தைரியம், விடாமுயற்சியுடன் செயல் பட்டால், விண்வெளிக்கு முதல் முறையாக சிங்கப்பூரர் ஒருவரை அனுப்ப நம்மால் முடியும்," என்று கூறினார் திரு லிம். ஆபத்து விளையும் வாய்ப்பு கள் இருந்ததால் இவ்வாண்டின் முயற்சிகள் சாத்தியமடைய வில்லை. எனினும், அடுத்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் இந்த முயற்சி மீண்டும் நடத்தப்படும். இம்முயற்சி சாத்தியமாக தமது முழு ஆதரவைத் தருவதாக திரு கணேஷ் தெரிவித்தார். இந்நிலையில், கணேஷ் தொடர்ந்து சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் 'ட்ரோன்' பயிற்சிப் பட்டறைகளை வழங்கி வருகிறார்.

இதில் கலந்துகொள்ள விரும்புவோர் http://www. arrowdynamiclabs.com என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள எவரும் இப் பட்டறைகள் மூலம் பயனடைய லாம் என்றார் திரு கணேஷ்.

இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியின்போது எடுக்கப்பட்ட படத்தில் விண்வெளிக்குச் செலுத்தப்பட இருந்த களத்துக்கு அருகில் கோஸ்பேஸ் திட்ட உறுப்பினர்களுடன் திரு கணேஷ் (வலக்கோடி). கோஸ்பேஸ் திட்டத்தை நடத்தும் இன்.ஜீனியஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு லிம் செங் (இடக்கோடி). படங்கள்: திரு பூ.கணேஷ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!