சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதி வேக ரயில் திட்டம் குறித்த கலந் துரையாடலுக்காக மலேசிய பிரதி நிதி ஒருவர் இம்மாத இறுதிக்குள் சிங்கப்பூருக்கு அனுப்பப்படுவார் என்று அந்நாட்டின் பொருளியல் விவகார அமைச்சர் முகமது அஸ் மின் அலி தெரிவித்திருக்கிறார். சிங்கப்பூர் தரப்பினருடன் தான் தொடர்பில் இருப்பதாக திரு அஸ் மின் கூறினார். கடந்த மாதம், தனது நாட்டின் தலைமைச் சட்ட அதிகாரி டோமி தாமசிடம் உரிய விளக்கங்களைக் கொடுத்துள்ள தாகவும் அதனை நாடாளுமன்றத் திடம் தெரிவித்துள்ளதாகவும் திரு அஸ்மின் சொன்னார். சிங்கப் பூர் அதிகாரிகளைச் சந்தித்து அது குறித்த விவரங்களைப் விவாதிக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.
2018 ஐரோப்பிய ஒன்றியம்- மலேசிய வர்த்தகக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய திரு அஸ்மின், செய்தியாளர்களிடம் பின்னர் இதனைத் தெரிவித்தார். அதிவேக ரயில் சேவை விவகாரம் தொடர்பில் முக்கியமான ஓர் அறிவிப்பு இவ் வாரம் வெளியிடப்படும் என்றும் திரு அஸ்மின் கூறினார்.