சிங்கப்பூரின் நீர்வளத்துக்கு மிரட் டல் இருக்காது என்று சிங்கப் பூரர்கள் உறுதியாக நம்பலாம் என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் தெரிவித்து உள்ளார். நேற்று முன்தினம் 14ஆம் பொங் கோல் நார்த் இன, சமய நல்லி ணக்க வீதி அணிவகுப்பில் திரு டியோ இவ்வாறு கூறினார். வலிமையும் மீள்திறனும் கொண்ட நாட்டை உருவாக்க சிங்கப்பூரர்கள் சொந்தக் காலில் நிற்கும் பண்பைப் பெறுவது அவசியம் என்று திரு டியோ கூறி னார்.
நீர்வளம் தொடர்பில் சிங்கப்பூர் எடுத்துவரும் தயார் நடவடிக்கைகளைச் சுட்டிய அவர், சிங்கப்பூருக்கு என்றென்றும் தண் ணீர் இருக்கும் என்றும் தண்ணீர்ப் பற்றாக்குறை இருக்காது என்றும் தெரிவித்தார். தண்ணீர் இருப்பை நீக்க விரும்பும் எவருடைய மிரட்ட லுக்கும் நாம் ஆளாக மாட்டோம் என்றும் திரு டியோ சொன்னார்.