இம்மாதத்தில் முதல் இரண்டு வாரங்களுக்கு நிலவிய வறட்சியான வெப்பமான வானிலை, அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வகம் தெரிவித்திருக்கிறது. அடுத்த இரண்டு வாரங்களில் மூன்று நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரை, சிறிது நேரத்திற்கு மட்டும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
காலை நேரத்தின் பிற்பகுதிக்கும் மதிய வேளையின் முற்பகுதிக்கும் இடையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு சிங்கப்பூர் முழுதும் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசலாம். மலாக்கா நீரிணையிலிருந்து தென் சீனக் கடலை நோக்கிச் செல்லும் சுமத்ரா புயல் ஒன்று இதற்குக் காரணம் என்று ஆய்வகம் கூறியது.