கைத்தொலைபேசி கடையில் திருடியதாகக் கூறப்படும் 23 வயது ஆடவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். சம்பவம் புளோக் 101 ஈசூன் அவென்யூ 5ல் உள்ள 'எஸ்கே டெலிகாம்' என்ற கடையில் அன்றைய நாள் இரவு சுமார் 9 மணிக்கு நடந்ததாக கடை உரிமையாளர் 36 வயது ஆன்ட்ரூ கோ, 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
கருநிறத் தொப்பியும் டி-சட்டையும் அணிந்த ஆடவர் ஒருவர் கடைக்குள் நுழைந்ததைக் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காணொளி காட்டியது. அந்தக் கடையின் காசாளர் பகுதியில் யாரும் இல்லை. அங்கிருந்து அவர் கைத்தொலைபேசி ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியேறினார். அவ்வாறு நடந்ததை கடையில் இருந்த இரண்டு பணியாளர்களும் மூன்று வாடிக்கையாளர்களும் கவனிக்கவில்லை.