கோலாலம்பூர்: மலேசியாவில் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகே உள்ள திடலில் நேற்று ஒன்றுதிரண்ட டாக்சி ஓட்டுநர்கள் சுமார் 150 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
கிராஃப் கார் சேவைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு திரண்டிருந்த டாக்சி ஓட்டுநர்கள், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கைச் சந்தித்து அவரிடம் மனு ஒன்றை கொடுக்கவிருப்பதாக டாக்சி ஓட்டுநர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஒருவர் கூறினார். ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்வதைத் தடுக்க அங்கு போலிசார் சிலர் பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாக போலிஸ் வட்டாரங்கள் கூறின.