கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியின் தமிழ்மன்றம் சார்பில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் 116 மாணவ, மாணவிகள் நூலகத்தில் தங்களை உறுப்பினராக இணைத்துக்கொண்டு, பாட நூல்களுடன் பொது அறிவுப் புத்தகத்தையும் படிப்பேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆண்டுதோறும் மறைந்த முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்த வகையில், கோவில்பட்டி பள்ளியில் தமிழ்மன்றத்தின் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. மொத்தம் 90 மாணவர்கள், 26 மாணவிகள் என மொத்தம் 116 பேர் காமராஜர் போல, வேட்டி, சட்டை, துண்டு அணிந்து, தலையில் காமராஜர் உருவம் பொறிக்கப்பட்ட அட்டையிலான தொப்பியும் அணிந்து விழாவில் பங்கேற்றனர். படம்: தமிழக தகவல் ஊடகம்