இருபது வயதைக் கடந்தவர் களுக்கான காதல் கதையாக உருவாகி வருகிறது '96' படம். இதில் விஜய் சேதுபதியும் திரிஷாவும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதாபாத் திரங்கள்தான் தன்னையும் விஜய் சேதுபதியையும் ஜோடி சேர வைத்ததாகச் சொல்கிறார் திரிஷா. ஏனெனில் இந்தக் கதையைப் புதுமுகங்களை வைத்து உருவாக்கக்கூடாது என்பதில் இயக்குநர் பிரேம்குமார் தீர்மானமாக இருந்தாராம். இவர் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். தற்போது இயக்குநராகி உள்ளார்.
"இதில் நானும் சேதுபதியும் வித்தியாசமாகத் தெரிவோம். இதில் எனக்காக பாடகி சின்மயி பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். அனைத்துப் பாடல்களையும் அவரே பாடியுள்ளார்," என்கிறார் திரிஷா.