You are here

கைரி: நான் இன்னும் அம்னோ கட்சியில்தான் இருக்கிறேன்

கோலாலம்பூர்: மலேசியாவில் 14ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய 10 நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற சபாநாயகராக முகமட் அரிப் யூசோப்பின் பெயர் முன்மொழியப்பட்டபோது, அந்த நியமனத்தை எதிர்த்து அம்னோ மற்றும் பாஸ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஆனால் அம்னோ ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான கைரி ஜமாலுதின் அவர்களுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்ய வில்லை. திரு கைரியும் கிமானிஸ் நாடாளுமன்ற உறுப்பின ரான அனிஃபா அமானும் அவை யிலேயே தங்கியிருந்தனர். இதுபற்றிக் கூறிய திரு கைரி, எதிரணி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தபோது தான் அதில் சேர்ந்து கொள்ளவில்லை என்ற போதிலும் தான் இன்னமும் அம்னோ கட்சியில்தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தபோது அவர்களுடன் சேராமல் அவையிலேயே அமர்ந்திருக்கும் திரு கைரி. படம்: பெர்னாமா