மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (செனட்டர்) நியமிக் கப்பட்ட, ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர் பி.வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட் டுள்ளது.
மலேசிய நாடாளுமன்றத்தில் நேற்று மாமன்னர் முன்னிலையில் பிரதமர் துறையின், தேசிய ஒற்றுமை, சமூக நலத்துக்கான அமைச்சராக அவர் பதவியேற்றார். இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்புத் துறை ஒன்று ஏற்படுத்தப் பட்டு அதற்கான பொறுப்பு அமைச் சராக வேதமூர்த்தி நியமிக்கப்பட லாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2013 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை ஆதரித்த வேதமூர்த்தி, பிரதமர் துறையின் துணையமைச்சராகவும் நியமிக்கப் பட்டார். ஆனால், இந்திய சமூகத் திற்கு அளிக்கப்பட்ட வாக்குறு திகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி 6 மாதங்களில் பதவி விலகினார். 14-வது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு வேதமூர்த்தி ஆதரவு வழங்கினார். அக்கூட்டணியின் தோழமைக் கட்சிகளில் ஒன்றாக ஹிண்ட்ராஃப் இணைத்துக்கொள்ளப்பட்டது.
அமைச்சராகப் பொறுப்பேற்ற ஹிண்ட்ராஃப் தலைவர் பி.வேதமூர்த்தி. படம்: ஊடகம்