வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இந்தியாவின் புதுடெல்லிக்கும் சென்னைக்கும் வெள்ளிக் கிழமை வரை நான்கு நாள் அதிகாரத்துவ பயணம் மேற் கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. நேற்று இந்தியா புறப்பட்ட அமைச்சர் விவியன் புதுடெல்லி யில் 10வது டெல்லி கலந்துரை யாடலில் பங்கேற்பார். அவர் "இந்தியா-ஆசியான் உறவை வலுப்படுத்துதல்" எனும் தலைப்பில் பேசுவார்.
அமைச்சர் விவியன், இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வர்த்தக தொழில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு, பெட்ரோலிய இயற்கை எரிவாயு, திறன் மேம்பாடு தொழில்முனைப்பு அமைச் சர் தர்மேந்திரா பிரதன் ஆகியோருடன் புது டெல்லி யில் சந்திப்பு நடத்தவுள்ளார். பின்னர் சென்னை செல்லும் வெளியுறவு அமைச்சர், தமிழ் நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார்.