எதிர்காலத்தில் நோயாளிகள், மென்பொருளு டன் பேசி தங்கள் உடல்நிலை பற்றிக் கூறி, ஏற்ற மருத்துவமனை அல்லது மருந்தகம் குறித்து ஆலோசனை பெற முடியும். இத்தகைய உரையாடல் கருவியில் நோயாளிகள், தங்களது நோயின் அறிகுறி, மருத்துவப் பின்னணி போன்ற அடிப்படைத் தகவல்களை வழங்கினால் போதும். மேலும், கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்போர் முன் னுரிமை கோரி மருத்துவமனைகளில் காத்தி ருக்கும் நேரத்தைக் குறைக்கலாம்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இத்தகைய உரையாடல் மென்பொருளர் தொழில்நுட்பர்கள் குறித்த விவரப் பட்டியல் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களுக்கு வழங்கப்படும் என்று சிங்கப்பூரின் சுகாதாரத் தொழில்நுட்ப முகவையான ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் கட்டமைப்பு (IHiS) தெரிவித்துள்ளது.
இரு தரப்பினரும் இணைந்து பணியாற்றி உரையாடல் மென்பொருளை உருவாக்கி, மேம்படுத்துவார்கள். பின்னர் அந்த மென்பொருள் பொது சுகாதாரப் பாராமரிப்பு அமைப்புகளில் பயன்படுத்தப்படும். பராமரிப்பு அதிகம் தேவைப்படும் நோயாளி களிடம் சுகாதாரப் பராமரிப்பாளர்கள் அதிக கவனத்தைச் செலுத்த இத்தகைய தொழில் நுட்பம் உதவும் என முகவை விவரித்தது.உச்சநிலைக் கூட்டத்தில் சுகாதாரப் பரா மரிப்புத் துறையில் தொழில்நுட்பம் குறித்தும் பேசிய சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், "சில மென்பொருள்கள் தற்போதைய சுகாதார பராமரிப்பு மாதிரிகளை மேம்படுத்துகின்றன. வேறு சில பெரும்மாற்றங்களைச் செய்து அதிக ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான பராமரிப்பு சேவைகளை வழங்கும் சாத்திய முள்ளவை," என்று கூறினார்.