சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் நேற்று அங்குள்ள ஒரு தொழிற்சாலை கட்டுமானப் பகுதியை பார்வையிடச் சென்றிருந்தபோது அத்திட்டத்தில் முழு கவனம் செலுத்தவில்லை என்று அத்திட்டத்தை மேற்பார்வையிடும் அதிகாரி களை ஏசியதாக ரோடோங் சின்மன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. ஹம்யோங் மாநிலத்தில் ஓரங் ஆற்றுப் பகுதியில் கட்டப்பட்டு வரும் மின்சார உற்பத்தி தொழிற்சாலைக் கட்டடப் பணிகள் 70 விழுக்காடு மட்டுமே முடிவுற்ற நிலையில் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முடிவுற வேண்டும் என்று திரு கிம் உத்தரவிட்டிருப்பதாக வடகொரிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் விடுமுறை முகாம் சுத்தமாக இல்லை என்றும் 'மோசமான மீன் தொட்டிகளைப்' போல் இருப்பதாகவும் திரு டிரம்ப் குறை கூறியதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு தொழிற்சாலை கட்டுமானப் பகுதியை பார்வையிட்ட வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன். படம்: ஏஎஃப்பி