மணிலாவில் கனமழையும் வெள்ளப்பெருக்கும்; மக்கள் தவிப்பு

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளநீர் தேங்கியதால் மக்கள் தவிக்க நேர்ந்தது என்று அதிகாரிகள் கூறினர். மெட்ரோ ரயில் நிலையங்களில் வெள்ளநீர் நிரம்பியதால் ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் ரயில் சேவைகள் பாதிக்கப்படவிலலை என்றும் வெள்ளநீர் நிலவரத்தை அணுக்கமாக கண்காணித்து வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு கருதி பள்ளிக்கூடங்களும் சில அலுவலகங்களும் நேற்று மூடப்பட்டதாகக் கூறப்பட்டது. மெரிகினா ஆற்றோரப் பகுதியில் வசிக்கும் மக்களை வீடுகளைவிட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!