ரஷ்யாவை ஆதரித்த டிரம்ப்; அமெரிக்கர்கள் கண்டனம்

வா‌ஷிங்டன்: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற அமெரிக்க உளவு அமைப்புகளின் கூற்றை மறுக்கும் வகையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பேசியிருப்பதற்கு அமெரிக் கர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் திங்கட்கிழமை திரு டிரம்ப், ரஷ்ய அதிபர் புட்டினை சந்தித்துப் பேசியபோது 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிடுவதற்கு காரணம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறினார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்று கூறும் அமெரிக்க புலனாய்வுத் துறையை அவர் நம்புகிறாரா அல்லது ரஷ்ய அதிபரை நம்புகிறாரா என்று டிரம்ப்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த திரு டிரம்ப், "அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிடவில்லை என்று ரஷ்ய அதிபர் கூறுகிறார். ரஷ்யா தலையிடுவதற்கு காரணம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரி யவில்லை," என்று கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!