துரோகத்தைக் கருவறுப்போம்: தினகரன் திட்டவட்டம்

பெங்களூரு: நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுடன் சட்டப் பேரவைக்கும் தேர்தல் வரும் என தாம் உறுதியாக நம்புவதாக அமமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தில் 37 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அம முக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், துரோ கத்தைக் கருவறுத்து மீண்டும் அதிமுகவைக் கைப்பற்றப் போவது உறுதி என்றார்.

"நான் ஏற்கெனவே முட்டை வடிவில் தான் நடப்பு ஆட்சிக்கு எதிராக ஒரு வெடிகுண்டு வரும் என்று கூறியிருந்தேன். தற்போது முட்டை நிறுவனங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது. இனி அதிமுகவினர் என்று கூறிக்கொள்பவர்கள் முட்டைப் பிரசாரம்தான் செய்ய முடியும். "முட்டைக்கு அடுத்தபடியாக அதிமுகவுக்கு எதிராக மேலும் ஒரு வெடிகுண்டு தயாராக உள் ளது. அது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு," என்றார் தினகரன். தமிழகத்தில் தற்போது துரோக ஆட்சி நடைபெற்று வரு வதாகக் குறிப்பிட்ட அவர், தமி ழக அரசுக்குத் தற்போது ஏற்பட் டுள்ள நெருக்கடி அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!