பாரிஸ்: உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணி நேற்று முன்தினம் சொந்த நாடு திரும்பியது. தலைநகர் பாரிஸின் மையப் பகுதியில் ஆயிரக்கணக்கான பிரெஞ்சு ரசிகர்கள் வெற்றியுடன் திரும்பிய நட்சத்திரங்களுக்கு குதூகல வரவேற்பு தந்து கௌர வித்தனர். வழி நெடுகிலும் நின்று கொண்டு கரவொலி எழுப்பிய பிரெஞ்சு ரசிகர்களுக்கு ஈரடுக்குப் பேருந்தில் இருந்த வீரர்கள் கிண்ணத்தைப் பெருமையுடன் காட்டி மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து, அதிபர் மாளிகைக்குச் சென்ற பிரெஞ்சு வீரர்கள், பயிற்றுவிப்பாளர் டிடியே டேஷோம் ஆகியோரை அந்நாட்டு அதிபர் இமானுவல் மெக்ரோனும் அவரது மனைவியும் வரவேற்றனர்.
அங்கு அவர்கள் அனைவரும் அதிபர் மாளிகையின் வாசலில் நின்றுகொண்டு பிரெஞ்சு தேசிய கீதத்தை உணர்ச்சி பொங்க பாடினர். இதை அடுத்து, பிரெஞ்சு குழுவுக்கு சிறப்பு விருந்து உபசரிப்பு அளிக்கப்பட்டது. "பிரான்சுக்குப் பெருமை சேர்த்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் அனைவரும் எங்கிருந்து வந்தீர் கள் என்பதை மறந்துவிடாதீர்கள். பிரான்ஸில் உள்ள பல்வேறு குழுக்கள் உங்களுக்குப் பயிற்சி அளித்துள்ளன. அவற்றை மறந்து விடாதீர்கள்," என விருந்துபசரிப் பின்போது அதிபர் மெக்ரோன் கூறினார்.
அதிபர் மாளிகைக்கு வெளியே வீரர்கள், பயிற்றுவிப்பாளர் டேஷோமுடன் இணைந்து கிண்ணத்துடன் கொண்டாடும் பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் (நடுவில்). (வலது படம்) வீரர்களை வரவேற்க பிரெஞ்சுக் கொடிகளுடன் திரண்ட ரசிகர்கள். படம்: ஏஎஃப்பி