சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருப்பதாகச் சொல்கிறார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். மேலும் இரவு நேரத்தில் கதை கேட்பதில்லை என்றும் அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கவுதம் கார்த்திக் ஜோடியாக 'இவன் தந்திரன்' படத்தில் நடித்தவர் ஷ்ரத்தா. கன்னடத்தில் இவர் நடித்த 'யூ டர்ன்' மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழில் மட்டும் இவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் சரிவர அமைவ தில்லை. அதனால் இந்தியிலும் கன் னடத்திலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அருள்நிதி ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருப்பவர், அதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தற்புகா சிவா இசை யமைக்கும் இந்தப் படத்தை பரத் நீல கண்டன் இயக்குகிறார். "இந்தப் படத்தில் என்னை நடிக்க வைப்பதாக படக்குழுவுக்கு எந்தத் திட்டமும் இல்லை. அது எனக்கும் தெரியும். ஆனால், திடீரென்று ஒரு நாள் நிலைமை தலைகீழாக மாறிப்போனது.
"வேறு கதாநாயகியை ஒப்பந்தம் செய்வதற்கு முன்னர் என்னைச் சந்திப்பதற்காக பெங்களூருக்கு வந்திருந்தார் பரத் நீலகண்டன். அவர் வந்தது இரவு நேரம். பொதுவாக நான் இரவு நேரங்களில் கதை கேட்பதில்லை. அதற்கென சில காரணங்கள் உள்ளன," என்கிறார் ஷ்ரத்தா.