அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சு களிலும் அமைப்புகளிலும் குறைபாடுகள் இருப்பது அரசாங்க தலைமைக் கணக்காய்வாளர் அலு வலகம் (ஏஜிஓ) நேற்று வெளியிட்ட வருடாந்திர அறிக்கை மூலம் தெரிய வந்திருக்கிறது. குத்தகை நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதிக் கட்டுப்பாட்டில் வலு வற்றத்தன்மை போன்றவை அவற் றில் அடங்கும். ஆய்வு மற்றும் மேம்பாடு தொடர்பிலான மானியம் வழங்கு தலின் நிர்வாகத்திலும் குறைகள் இருப்பதாக 'ஏஜிஓ' அலுவலகம் கண்டுபிடித்தது. 2017/2018 நிதியாண்டுக்கான கணக்குத் தணிக்கை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதன் தொடர்பில் கருத்து ரைத்த நிதி அமைச்சு, "பொது வளங்களைப் பயன்படுத்தும் அர சாங்க அமைப்புகளிடம் பொறுப்பு டைமையும் வெளிப்படைத்தன்மை யும் இருப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை. "அந்த அடிப்படையில்தான் வழக்கமாகவும் மிகவும் விரிவாக வும் நடத்தப்படும் கணக்குத் தணிக்கைகள் மூலமாகவும் அதன் கண்டுபிடிப்புகளை ஒளிவுமறை வின்றி வெளியிடுவதன் மூலமாகவும் 'ஏஜிஓ' தனது கடப்பாட்டைத் வெளிப்படுத்தி வருகிறது," என்று தெரிவித்தது.
வெளிநாட்டிலிருந்து நேரடியாக வாங்குவதை தனது அதிகாரிகள் நிறுத்திக்கொண்டனர் என்றும் எல்லா பரிவர்த்தனைகளும் இனி அரசாங்கத்தின் 'ஜிபிஸ்' இணையவாசல் மூலம் வாங்கப்படும் என்றும் தனது அறிக்கையில் மக்கள் கழகம் தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்