மலேசியாவைவும் சிங்கப்பூரையும் இணைக்கும் அதிவேக ரயில் திட் டத்திற்கு 110 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று மலேசிய அரசாங்கம் மதிப்பிட்டு இருக்கிறது. இந்த மதிப்பீட்டில் முந்தைய மலே சிய அரசாங்கம் வெளியிடாத மறை முக செலவுகளும் உள்ளடங்கும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் பொருளியல் விவகார அமைச்சர் முகம்மது அஸ்மின் அலி விளக்கம் அளித்தார். முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கும் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங்கும் கேட்ட கேள்வி களுக்கு அமைச்சர் பதிலளித்தார். அந்த ரயில் திட்டத்திற்கு 72 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று முந்தைய தேசிய முன்னணி அரசு தெரிவித்திருந்தது.
ஆனால் இப்போதைய பக்கத் தான் ஹரப்பான் அரசாங்கம், அந்தத் திட்டத்தின் செலவு கிட்டத்தட்ட 110 பில்லியன் ரிங்கிட் என்று அறி வித்துள்ளது. இப்போதைய அரசாங்கம் எப்படி இந்தத் தொகையைக் கணக்கிட்டது என்று அந்த இருவரும் கேட்டனர். முந்தைய அரசாங்கம் வெளி யிடாத மறைமுக செலவுகளும் இந்தத் தொகையில் சேர்க்கப்பட்டு இருப்ப தாக அமைச்சர் விளக்கம் அளித்தார். "அந்த ரயில் திட்டத்திற்கு ஆகும் முழுச் செலவு 110 பில்லியன் ரிங்கிட் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. மலேசியாவுக்கு இப்போது 1 டிரில்லி யன் ரிங்கிட் தேசிய கடன்சுமை இருக் கிறது என்பதால் அந்த ரயில் திட்டத் திற்கான செலவு இப்போது மலேசியாவுக்குத் தாக்குப்பிடிக்க முடி யாததாகவே இருக்கும்," என்றார் அமைச்சர். அந்தத் திட்டத்திற்கான அனைத்துலக ஏலக்குத்தகைகள் தாக்கல் டிசம்பர் 28ஆம் தேதிதான் முடிவடைகிறது.
மலேசியாவின் பொருளியல் விவகார அமைச்சர் முகம்மது அஸ்மின் அலி. படம்: தி ஸ்டார்/ஆசியா நியூஸ் நெட்வொர்க்