நான்சிங்: 24வது உலகப் பூப்பந்து வெற்றியாளர் கிண்ணப் போட்டி சீனாவில் வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான அட்ட வணை நேற்று முன்தினம் அறி விக்கப்பட்டது. இதில் பங்கேற்கும் இந்திய வீராங் கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் கடினமான பிரிவில் இடம் பிடித் துள்ளனர். இருவருக்கும் நேரடி யாக 2வது சுற்றில் விளையாட வாய்ப்பு அளிக் கப்பட்டுள்ளது. சிந்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினால் உலக தரவரிசை யில் ஒன்பதாவது இடத்தில் உள்ள சுங் ஜி ஹூனை (தென்கொரியா) சந்திக்க நேரிடலாம்.
அவர் காலிறுதிக்குத் தகுதி பெற்றால் நடப்பு வெற்றியாளர் நஸே„மி ஒகுஹராவை (ஜப்பான்) எதிர்கொள்ள வேண்டியது வர லாம். கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண பூப்பந்தாட் டப் போட்டியில் ஜப்பானின் நஸே„மி யிடம் சாய்னா நேவால் தோற்கடிக்கப்பட்டார் என்பது குறிப் பிடத் தக்கது. இதேபோல் சாய்னா 3வது சுற்றுக்குள் நுழைந்தால் 4ஆம் நிலை வீராங்கனை ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) எதிர்கொள்ள வேண்டியது வரலாம்.