லண்டன்: இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டுத் தினேஷ் கார்த் திக் இடம்பிடித்துள்ளார். அதே போல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். சித்தார்த் கவுல் நீக்கப்பட்டுப் புவ னேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டார். இந்திய அணியின் ஆட்டக் காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - தவான் இணை, ஓட்டங் கள் குவிக்கத் திணறியது.
இதனால், முதல் ஐந்து ஓவர் முடிவில் இந்திய அணி 12 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 18 பந்தில் 2 ஓட்டங்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில் வில்லே யின் பந்துவீச்சில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து அணித்தலைவர் விராத் கோஹ்லியும் ஷிகர் தவா னும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி சீரான வேகத்தில் ஓட்டங்களைக் குவித்த னர். 17.4 வது ஓவரில் இந்தியா இரண்டாவது விக்கெட்டை இழந் தது.
பிரிட்டனில் நேற்று முன்தினம் மூன்றாவது ஒரு நாள் அனைத்துலக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் இங்கிலாந்தும் இந்தியாவும் பொருதின. அந்த ஆட்டத்தில் பந்தடிக்கும் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம்: ராய்ட்டர்ஸ்