சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கிட்டத்தட்ட 60 லட்சம் உறுப்பினர்களை அதிமுக இழந்து விட்டதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' தெரிவித்து உள்ளது. ஜெயலலிதா இருந்தபோது ஒன்றரைக் கோடி உறுப்பினர்களு டன் அசுர பலத்துடன் அதிமுக இருந்தது. அவர் மரணம் அடைந் ததும் கட்சியின் தலைமைப் பொறுப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஏற்றனர். அதேநேரத்தில் டிடிவி தின கரன் அதிமுகவுக்கு எதிராக அமமுக என்னும் கட்சியைத் தொடங்கி அதிமுக உறுப்பினர் களைத் தம்வசம் இழுக்கும் முயற்சி யில் தீவிரமாக ஈடுபட்டார். அதற்கு அவருக்குப் பலன் கிடைத் தது.
கட்சித் தலைமைப் பதவிகளில் இருந்தோரும் மாவட்ட அளவில் பொறுப்புகளை வகித்தோரும் ஏராள மானோர் தினகரன் கட்சியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். அதிமுகவுக்குப் பெரியதொரு மாற்றுக் கட்சியாக அமமமுக உருவெடுத்து உள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் டிடிவி தினகரன் ஊர் ஊராகச் சென்று கூட்டங்களை நடத்துவது தான். குறிப்பாக, அண்மையில் கோவையில் நடந்த தினகரனின் பொதுக்கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. அத்துடன் சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் தினகரன் நடத்திய போராட்டத்திலும் ஆயி ரக்கணக்கில் அவரது கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்.