சிங்கப்பூரில் சாலைகளிலும் பூங்காக்களிலும் உள்ள இரண்டு மில்லியன் மரங்களின் கண் காணிப்பையும் பராமரிப்பையும் மேலும் கடுமையாக்கி, செயல்திறன் மிக்கதாக்க புதிய தொழில்நுட்பம் சார்ந்த திட்டத்தை தேசிய பூங்கா கழகத்தால் நேற்று அறிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் தொழில்நுட்பத்தின் உதவியைக் கொண்டு இயற்கை யைப் பேணிக் காப்பதையும் பசுமைச் சுற்றுப்புறத்தை நிர்வகிப்பதையும் தீவிரமாக்கும்.
கழகத்தின் அதிகாரிகள் தங்கள் கையடக்கக் கருவிகள் வாயிலாக மரங்கள், பூங்காக்கள், தோட்டங் கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பெறலாம். உதாரணத்திற்கு தேசிய பூங்கா கழகம், மின்னியல் உணர்வு சாதனம் ஒன்றைப் பயன் படுத்தி, மரங்கள் சாய்ந்திருக்கின் றன என்பதைக் கண்டறியலாம். இதன்மூலம் தேசிய பூங்காக் கழக அதிகாரிகள் மரம் விழுவதைத் தடுக்க மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கலாம். மின்னிலக்க பெருந்திட்டத்தின் கீழ் இடம்பெறும் திட்டங்களில் இதுவும் ஒன்று.