தேசிய நினைவுச் சின்னங்கள் பற்றிய புதிய நூல் அறிமுகம்

சிங்கப்பூரின் வரலாறு, மரபுடைமை அம்சங்களை எடுத்துக்கூறும் நூல் ஒன்று நேற்று இஸ்தானாவில் வெளியிடப்பட்டது. வழிபாட்டுத் தலங்கள், பள்ளி கள், அரும்பொருளகங்கள், வர்த்த கக் கட்டடங்கள் உள்ளிட்ட பல் வேறு தேசிய நினைவுச் சின்னங்க ளுக்கு அர்ப்பணமாக இந்த நூல் விளங்கும். 'Monumental Treasures: Singapore's Heritage Icons' என்ற தலைப்பைக் கொண்டு இருக்கும் இந்த நூலில், 70க்கும் அதிகமான தேசிய நினைவுச் சின்னங்கள் குறித்தும் அவற் றுக்குப் பின்னால் உள்ள சமூக ங்கள் குறித்தும் கதைகளும் படங்களும் இடம்பெறுகின்றன. இந்த நூல் 288 பக்கங்களைக் கொண்டுள்ளது.

இந்த நூலை வெளியிட்ட அதிபர் ஹலிமா யாக்கோப், "தேசிய நினைவுச் சின்னங்கள் நமக்கு முக்கியமானவை. ஏனெ னில், அவை வரலாற்றை எடுத்துக்கூ றும் பொக்கிஷங்கள். நமது கடந்தகாலத்தைப் பற்றிச் சொல்வ தோடு அதை நிகழ்காலத்துடனும் எதிர்காலத்துடனும் தொடர்புபடுத்த நினைவுச் சின்னங்கள் உதவு கின்றன," என்றார்.

இஸ்தானாவில் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப்புடன் தேசிய மரபுடைமைக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாங் ஹுவீ நீ (இடது), ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியர் வாரன் ஃபெர்னாண்டஸ் உடன் உள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!