தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச் சாலையில் இரண்டு கார்களுக்கும் இரண்டு மோட்டார் சைக்கிள் களுக்கும் இடையே விபத்து நடந் ததைத் தொடர்ந்து மூன்று பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட் டனர். நேற்று காலை இந்தச் சம்பவம் நடந்தது. 30 வயது ஆண் மோட்டார் சைக்கிளோட்டுனரும் பின்னிருக் கையில் அமர்ந்திருந்த 27 வயது பெண்ணும் முறையே இங் டெங் ஃபோங் மருத்துவம னைக்கும் கூ டெக் புவாட் மருத் துவமனைக்கும் அனுப்பப்பட்டனர்.
அவர்கள் இருவருக் கும் கைகளிலும் கால் களிலும் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. சாலையில் சென்று கொண்டிருந்த கார்க ளில் ஒன்று திடீரென நிறுத்திய தால் பின்னே இருந்த மற்றொரு கார் தக்க நேரத்திற்குள் நிறுத்த முடியாமல் முன்னேயிருந்த காரின் பின்பகுதியில் மோதியதாக கூறப் பட்டது. விபத்து பற்றி போலிசுக்கு நேற்றுக் காலை 8.17 மணிக்குத் தகவல் கிடைத்தது. விபத்தில் காயமடைந்த மூன்றாவது நபரும் கூ டெக் புவாட் மருத்துவமனைக் குக் கொண்டு செல்லப்பட்டார்.