கோலாலம்பூர்: 1எம்டிபி முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி கள் இருவரைக் கைது செய்ய மலேசிய புலன் விசாரணை யாளர்கள் ஆணை பிறப்பித்திருப் பதாக அது பற்றி நன்கு அறிந்த ஒருவர் கூறியுள்ளார். 1எம்டிபி நிறுவனத்தின் முன்னாள் தலைமை ஆலோசகர் ஜஸ்மின் லூ அய் சுவான், முன்னாள் நிர்வாக இயக்குநர் கேசி டாங் கெங் சீ ஆகிய இருவரையும் மலேசிய ஊழல் தடுப்பு அதிகாரிகள் தேடி வருவதாகவும் அவர் சொன்னார்.
மலேசியாவில் 1எம்டிபி நிதி முறைகேடு தொடர்பில் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ள வேளையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது மூன்று நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளும் அதி காரத்தை தவறாகப் பயன்படுத் தியதான ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. திரு நஜிப் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார். 1எம்டிபி நிதி முறைகேடு குறித்த விசாரணை கிட்டத்தட்ட முடிவடைய இருப்பதாக போலிஸ் தலைமை ஆணையாளர் முகமட் சுக்ரி அப்துல் கூறினார். வெளிநாடுகளில் ஆதாரங்களைத் திரட்டுவதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.
லூ மற்றும் டாங் மீது தவறு எதுவும் செய்ததாக குற்றம் சாட்டப்படவில்லை. பின்னர் என்ன காரணத்திற்காக அவர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 1எம்டிபி நிறு வனத்தின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி நிறுவன நிதி விவகாரம் குறித்த விசாரணைக்கு உதவு வதற்காக லூ, டாங் ஆகிய இருவரையும் கடந்த ஜூன் மாதம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத் திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.