புதுடெல்லி: தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை சார்பாக டெல்லியில் தமிழ் மொழி, தமிழ் இசை மற்றும் பரதநாட்டிய வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வகுப்புகள் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் நடைபெறும். நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் பாண்டிய ராஜன் இவ்வகுப்புகளைத் தொடங்கி வைத்தார்.
டெல்லியில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் வசித்து வருகின்றனர். அங்கு இந்தி மொழியே அதிகம் பேசப்படுவதால் தமிழ் குழந்தைகளுக்கு தாய்மொழியைக் கற்பதும், தமிழில் பேசுவதும் இயலாத காரியமாகி விடுகிறது. மேலும் தமிழ் இசை மற்றும் பரதநாட்டியத்தைக் கற்பதற் கான வாய்ப்புகளும் கிடைப்ப தில்லை. இதை யடுத்து மேற்குறிப்பிட்ட வகுப்புகளைத் தொடங்க முடிவானது. தமிழ்நாடு இல்லத்தில் வாரத்தில் இருமுறை இந்த பயிற்சி வகுப்புகள் நடை பெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. ஓர் ஆண்டுப் பயிற்சி யின் இறுதியில் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்க ளுக்கு தமிழக அரசின் சான்றிதழ் அளிக்கப்பட உள்ளது.