சென்னை: விவசாயிகளின் உணர் வுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாயிகளை யும் பொதுமக்களையும் துன் புறுத்தி விளைநிலங்களைக் கைய கப்படுத்தும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித் துள்ளனர். சென்னை, சேலம் இடையே எட்டு வழி பசுமைச் சாலை அமைக்க கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இத்திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு தரப்பி னரும் வழக்கு தொடுத்துள்ளனர். இதையடுத்து பசுமை வழிச் சாலை திட்ட இயக்குநர் பதில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்தச் சாலை அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசலும் பயண நேரமும் குறையும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதிகள், அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். "பசுமை வழிச்சாலையில் வாக னங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லும் என்பதில்தான் அரசு அக்கறை காட்டுகிறது. அதை விட விவசாயிகளின் உணர்வுக ளுக்கும் அவர்களுடைய நிலங்க ளுக்கும் அரசு உரிய மதிப்பு அளிக்க வேண்டும். "இது போன்ற திட்டங்களுக்கு பொதுவாக எதிர்ப்பு வரத்தான் செய்யும். அதற்காக போலிஸ் பலத்தை பயன்படுத்தி, முதியவர் களைக் கூட கீழே தள்ளிவிடுவதா? எதற்காக அரசு இவ்வளவு அவச ரம் காட்டுகிறது?" என்று நீதிபதி கள் பல்வேறு கேள்விகளை அடுக்கினர்.
அரசின் செயல்பாடுகளைத் தங்களால் புரிந்துகொள்ள முடிய வில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி கள், இந்தத் திட்டத்துக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக் கின்றனர் என்றால், இத்திட்டம் குறித்த சரியான புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாகவே அர்த்தம் என் றும் தெரிவித்தனர்.