லாஸ் ஏஞ்சலிஸ்: அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பிரான்ஸ் மகுடம் சூடியது. அந்த அணியில் மத்திய திடல் ஆட்டக்காரர் பால் போக்பா முக்கிய வீரராக இருந்து பிரான்ஸ் வெற்றி பெற உதவி னார். போக்பா இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் குழு வுக்காக விளையாடி வருகிறார். உலகக் கிண்ணத்தை வென் றுள்ள போக்பா இனி புது உத் வேகத்துடன் யுனைடெட்டுக்காக விளையாடுவார் என்று அக்குழு வின் நிர்வாகி ஜோசே மொரின்யோ தெரிவித்துள்ளார். கடந்த பருவத்தில் யுனைடெட் குழுவுக்காக போக்பா களமிறங் கியபோது எதிர்பார்த்த அளவுக்கு அவர் விளையாடவில்லை. இதன் காரணமாக அவர் மாற்று ஆட்டக் காரராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
"உலகக் கிண்ணப் போட்டியின் கடைசி சில ஆட்டங்களில் போக் பாவின் ஆட்டம் அபாரம். இதை அவர் உணர வேண்டும். இறுதி ஆட்டத்தில் அவர் மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இனி உத்வேகத்துடன் விளை யாடுவார்," என்று புகழாரம் சூட்டினார் மொரின்யோ.