லண்டன்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பிரேசிலின் கோல்காப்பாளராகக் களமிறங்கிய அலிசனை ஒப்பந்தம் செய்ய இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஜாம்பவான் லிவர்பூல் தீவிரமாக முயன்று வருகிறது. இந்த ஒப்பந்தம் அடுத்த ஓரிரு நாட்களில் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. லிவர்பூலுடன் 120 மில்லியன் வெள்ளி பெறுமானமுள்ள ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் அலிசன் கையெழுத்திடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டால் உலகிலேயே ஆக விலைமிக்க கோல்காப்பாளர் எனும் பெருமைக்கு அவர் சொந்தக்காரராவார் என்பது குறிப் பிடத்தக்கது.
தற்போது உலகிலேயே ஆக விலைமிக்க கோல்காப்பாளர் மான்செஸ்டர் சிட்டியின் எடர்சன். இவரும் பிரேசிலைச் சேர்ந்தவர். எடர்சனை போர்ச்சுகீசிய குழுவான பென்ஃபிகாவிடமிருந்து சிட்டி கடந்த பருவத்தில் வாங்கியது. அலிசன் தற்போது இத்தாலிய லீக்கில் போட்டியிடும் ரோமா குழுவுக்காக விளையாடி வருகி றார்.
உலகக் கிண்ணப் போட்டி முடிந்து தற்போது விடுமுறையில் இருக்கும் அலிசன் லிவர்பூலில் இணைவதற்கான அனுமதியை பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து, இங்கி லாந்தின் லிவர்பூல் நகருக்குச் சென்று ஒப்பந்தத்தில் கையெழுத் திடுவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனை செய்ய இருப்பதாக அறியப்படுகிறது. கடந்த பருவத்துக்கான சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத் தின்போது கோல்காப்பாளர் லோரி கரியஸ் செய்த பிழைகளால் வெற்றி வாய்ப்பை லிவர்பூல் இழந்தது. எனவே நம்பகமான, வலிமை மிக்க கோல்காப்பாளரை ஒப்பந்தம் செய்ய லிவர்பூல் முனைப்புடன் உள்ளது.
பிரேசில் கோல்காப்பாளர் அலிசன். படம்: ஏஎஃப்பி